வொக்ஸ்வெகன் வாகன நிறுவனம் இலங்கையில் கிளையொன்றை நிறுவுகிறது
சர்வதேச ரீதியில் அங்கீகாரம் பெற்ற வொக்ஸ்வெகன் வாகன நிறுவனத்தின் கிளையொன்று குளியாப்பிட்டிய பகுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கொள்கைத் திட்டமிடல் பொருளாதார நடவடிக்கை தொடர்பான முன்னாள் பிரதியமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
இது தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நடவடிக்கை இன்னும் ஒரு சில வாரங்களில் இடம்பெறவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் நேற்றைய தினம் (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்தக் கருத்தனை வெளியிட்டார்
நமது நிருபர்



