முன்னாள் மீன்பிடித்துறை பிரதியமைச்சரிடம் விசாரணை
நீர்கொழும்பு களப்பினை அபிவிருத்தி செய்வதற்கான திட்டத்திற்குக் கிடைத்த 132 இலட்ச ரூபாயினை கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் முன்னாள் மீன்பிடித்துறை பிரதியமைச்சர் சரத்குமார குணரத்னவை 4 மணித்தியாலமளவில் விசாரணை செய்து வாக்கு மூலம் பெறப்பட்;;;டதாக பாரிய ஊழல் மோசடி மற்றும் அதிகாரம், அரச சொத்துக்கள் மற்றும் சலுகைகளைத் துஷ்பிரயோகம் சம்பந்தமாக விசாரண செய்யப்பட்டதாக தெரிவக்கப்படுகின்றது.
நமது நிருபர்



