அமெரிக்காவில் பெண்ணுக்கு சிறிய வகை செயற்கை மாற்று இருதயம் பொருத்தி டொக்டர்கள் சாதனை
![]() |
| Add caption |
அமெரிக்காவில் பெண்ணுக்கு செயற்கை மாற்று இருதயம் பொருத்தி டொக்டர்கள் சாதனை படைத்தனர். அமெரிக்காவில் உள்ள லோஸ்ஏஞ்சல்ஸ் நகரை சேர்ந்த பெண் நெமாக ஹாலா (44). இவருக்கு 5 குழந்தைகள் உள்ளனர். இவர் மிக கடுமையான இருதய நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரது இருதய செயல்பாடு நிற்கும் நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தார். எனவே, அவரை லோஸ் ஏஞ்சல்ஸ் மெடிக்கல் மையத்தில் இருந்து கலிபோர்னியா பல்கலைக்கழக ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு டொக்டர்கள் செயற்கை இருதய மாற்று சத்திரசிகிச்சை செய்தனர். மிக இக்கட்டான உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள இருதய நோயாளிகளுக்கு 50 சி.சி. சின்கார்டியா திறன் கொண்ட சிறிய அளவிலான செயற்கை மாற்று இருதயம் பொருத்தப்படும். அந்த வகையில் இந்த பெண்ணுக்கு பொருத்தினர். சோதனை முறையில் தயாரிக்கப்பட்டிருந்த அந்த இருதயம் தற்போது வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. அதற்காக நெமாக ஹாலா டொக்டர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதன் மூலம் உலகிலேயே முதன்முறையாக சிறிய அளவிலான மாற்று இருதயம் பொருத்தப்பட்ட முதல் பெண் என்ற பெருமையை இவர் பெறுகிறார். 70 சி.சி. சின்கார்டியா திறன் கொண்ட மாற்று இருதயம் பொருத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்தியல் நிர்வாகம் கடந்த 2004–ம் ஆண்டு அனுமதி வழங்கியது. இந்த ரக செயற்கை மாற்று இருதயத்தை உலகம் முழுவதும் இதுவரை 1,440 பேர் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.



