Breaking News

காலிறுதியில் சானியா ஜோடி

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் இரட்டையர் பிரிவு காலிறுதிக்கு இந்தியாவின் சானியா மிர்சா, சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் ஜோடி முன்னேறியது.
லண்டனில், விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் இரட்டையர் பிரிவு 3வது சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா, சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் ஜோடி 6–4, 6–3 என்ற நேர் செட் கணக்கில் ஸ்பெயினின் அனாபெல் மெடினா காரிகுயஸ், அரன்ட்சா பாரா சான்டோன்ஜா ஜோடியை வீழ்த்தியது.
ஆண்கள் இரட்டையர் பிரிவு 3வது சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ருமேனியாவின் புளோரின் மெர்ஜியா ஜோடி 7–6, 6–7, 7–6, 7–6 என்ற செட் கணக்கில் போலந்தின் குபோட், பெலாரசின் மிர்ன்யி ஜோடியை தோற்கடித்தது.