இதுதான் சரியான கல்யாண/கடிகார மோதிரம்..!
மோதிரத்திற்க்கும், கடிகாரத்திற்கும் கல்யாணம் ஆகி ஒரு குழந்தை இருந்தா எப்பிடி இருக்கும், கண்டிப்பா அது இப்படி தான் இருக்கும். இதன் பெயர், ரிங் கிளாக்..! தங்கம், வைரம், வெள்ளி களில் கல்யாண மோதிரம் செய்து போடுவதற்கு பதிலாக இதை வாங்கி அணிந்தால் இன்னும் அழகா, அற்புதமா இருக்கும்..! அப்படி என்னதான் இதுல வித்தை இருக்கு என்று தெரியலாம் வாங்க..! மோதிரம் போல் மாட்டிக் கொள்ள கூடிய, நேரம் காட்டும் சூப்பர் கருவி, இது மிகவும் எளிமையான டிசைன் கொண்டது. மோதிரத்தை சுற்றி இயங்கும் தனித்துவமான கடிகார அமைப்புக்கொண்டது. சுற்றி சுற்றி நேரம் ஓடுவதால் சரியான நேரத்தை பார்க்க 360 டிகிரி கோணத்திலும் பார்த்துக் திருப்பி கொள்ளலாம். அல்ட்ராதின் பெட்டரி மற்றும் சக்தியை சேமிக்கும் எல்இடி லைட் கொண்ட உள்கட்டமைப்பு. நகை செய்ய பயன்படுத்தும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மூலம் தயாரிக்கப்பட்டது. நீரில் நனையாத வோட்டர் ப்ரூஃப் அமைப்பு கொண்டது ஆக இதை போட்டுக் கொண்டு குளிக்கலாம், மழையில் நனையலாம். 1 நிமிடத்திற்குள் ஓட்டோமட்டிக்காக எல்இடி நின்று விடும். மறுபடியும் தொட்டால் உடனே ஒன் ஆகிவிடும். எளிதாக நேரம் செட் செய்யும்படி அமைக்கப்பட்டுள்ள இதன் அதிகபட்ச சார்ஜிங் டைம் வெறும் 2 மணி நேரம் மட்டுமே ஆகும்.
நீலம் மற்றும் ஒரேஞ்சு நிறங்களில் லைட் எரியும்படி செட் செய்து கொள்ளலாம்..! வெகு விரைவில் எமது நட்டு சந்தைகளில் கிடைக்கும்.




