ஏறாவூர் நகரசபை உதவித் தவிசாளர் ரெபுபாசம் ஹிஸ்புல்லாஹ்வுக்கு ஆதரவு
ஏறாவூர் நகரசபை முன்னாள் உதவித் தவிசாளர் ரெபுபாசம் ஹிஸ்புல்லாஹ்வுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (28) மாலை காத்தான்குடி கயா பேக் ஹவுஸ் உணவகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இந்த ஆதரவினை வெளியிட்டார்
ஊடகவியலாளர்கள் மத்தியில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் ஏறாவூர் நகரசபைக்கு இரண்டு தடவைகள் உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டு என்னால் முடிந்த சேவைகளை ஆற்றி பிற்பட்ட காலத்தில் உதவித் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டு எமது பணியினை காத்திரமாக செய்தோம்.
தற்போது தேர்தல் நெருங்கியிருக்கின்ற இக்கால கட்டத்தில் பேட்டியிடுகின்ற முஸ்லிம் வேட்பாளர்களுக்குள் வெற்றி வாய்ப்பு அதிகமுள்ள அதிகமான விருப்பு வாக்குகளைப் பெறக்கூடிய வேட்பாளர் சகோதரர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்தான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையின் அடிப்படையில் அவருக்கு ஆதரவு தெரிவிக்க எனது ஆதரவாளர்களுடன் வந்திருக்கின்றேன். இதன் மூலம் எனது பிரதேசத்தை அபிவிருத்தி செய்துகொள்ள முடியும் என நம்புகின்றேன்.
ர்pதென்ன தொடக்கம் பெரிய கல்லாறு வரை இன மத வேறுபாடின்றி சேவை செய்யக்கூடிய ஒருவர். அதுமட்டுமல்ல, அரச நிதி மூலம் செய்கின்ற சேவைக்கு அப்பால் சவூதி அரேபிய நாட்டினுடைய நிதி உதவிகளைக் கொண்டு நிறுவனங்களின் ஆதரவோடு மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை கொண்டுவந்து அமுல்படுத்தும் ஒருவர்.
குறிப்பாக மக்களுடைய வாழ்வாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு குடிநீர் வசதி, வீட்டு வசதி தெருக்கள் மற்றும் இன்னோரன்ன பணிகளை எமது மண்ணிற்காக செய்யும் ஒருவர். இவரது வெற்றியில் நாம் பங்காளர்களாக மாற வேண்டும். அதன் மூலம் எமது பிரதேசம் வாழ வேண்டும் அந்த நோக்கத்திலேதான் இந்த இணைவு இங்கு இடம்பெறுகிறது.
சகோதரர் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் பாராளுமன்றத்தில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பிர்களுக்குள் ஆகக் கூடுதலான காலம் பதவி வகித்த ஒருவராக நான் காண்கின்றேன். அவரது தூர நோக்கமும் தூய நோக்கமும் கொண்ட அபிவிருத்திக்காக அவர் ஆற்றிய பங்களிப்புக்காக அவரின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காகவே அணைந்து செயற்பட முன்வந்திருக்கின்றோம் என ரெபுபாசம் தனதுரையில் குறிப்பிட்டார்
ஹிஸ்புல்லாஹ் உரை
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய மக்கள் சுததந்திரக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் இந்த நிகழ்வில் உரையாற்றும்போது எதிர்வருகின்ற பாராளுமன்றத் தேர்தலிலே ஐக்கிய மக்கள் சுததந்திரக் கூட்டமைப்பிலே போட்டியிடுகின்ற எமது வெற்றியை உறுதி செய்வதற்காக அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள், மக்களிடையே அதிக செல்வாக்குப் பெற்றவர்கள் நாளாந்தம் நமது அணியோடு இணைந்து நமது வெற்றிக்காக செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்
அந்த வகையிலே ஏறாவூர் நகரசபையின் உதவித் தவிசாளர், ஏறாவூர் வர்த்தக சங்கத் தலைவர், தொழிலதிர் ஆசிரியர் ரெபுபாசம் அவர்கள் எமது அணியோடு இணைந்து நமது வெற்றிக்காக உழைப்பதற்கு தீர்மானித்திருக்கின்றார்கள். அவரோடு உயிருக்குயிராக இருந்து செயற்பட்ட நூற்றுக் கணக்கான இளைஞர்கள் மற்றும் வர்த்தகர்களும் எம்மோடு இணைந்து செயற்படத் தீர்மானித்திருக்கின்றார்கள்.
கடந்த பல ஆண்டுகளுக்கு மேல் இரு தசாப்தங்களுக்கு மேல் கௌரவ அலிஸாஹிர் மௌலானா அவர்ளுடைய அணியிலிருந்து அவரது வெற்றிக்காக உழைத்து அவருக்காகப் பாடுபட்ட பிரதி நகர முதல்வர் ரெபுபாசம் அவர்களும் அவரது ஆதரவாளர்களும் இன்று எம்மோடு இணைந்து எமது வெற்றியை உறுதி செய்வதற்காக எடுத்த தீர்மானத்தை நாங்கள் மிகவும் அன்போடு வரவேற்கின்றோம். அவருடைய இணைவு, அவருடைய ஆதரவாளர்கள் வழங்குகின்ற ஆதரவு எமது வெற்றியை மேலும் பலமுள்ள வெற்றியாக மாற்றும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது.
ஆகவே நாங்கள் அவரை கட்சியின் சார்பில் மிகவும் அன்புடன் வரவேற்பதோடு எதிர்காலத்திலே இந்தத் தேர்தலுக்குப் பின்னரும் அரசியல் ரீதியிலே அவர் உயர்ந்த அந்தஸ்திலே அந்தப் பிரதேசத்திலிருந்து மக்களுக்குப் பணியாற்றக்கூடிய வகையில் சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டு, எதிர்காலத்தில் அந்த மக்களுக்கு பணியாற்றுவதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதென கூற விரும்புகின்றேன் என தெரிவித்தார்
இந்த ஊடகவியலாளர் மாநாட்டில், கடந்த வெள்ளிக்கிழமை ஹிஸ்புல்லாஹ்வுடன் இணைந்து கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் றஊப் அப்துல் மஜீட், முன்னாள் காத்தான்குடி நகர சபை உதவித் தவிசாளர் ஜெஸீம், முன்னாள் காத்தான்குடி நகர சபை உறுப்பினர் அலி சப்ரி மற்றும் இரு தரப்பு ஆதரவாளர்களும் பங்குபற்றினர்.
எம்.ஐ.அப்துல் நஸார்



