நாட்டில் எய்ட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை திடீர் அதிகரிப்பு !
இவ்வருடத்தில் H.I.V. தொற்றுக்கு உள்ளான 153 பேர் இதுவரையான புதிதாக இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பெண்களை விட ஆண்களுக்கே அதி வேகமாக H.I.V. தொற்றால் வீக்கம் ஏற்படுவதாகவும் உரிய மருந்துகளை எடுத்துக்கொள்வதன் மூலம் அதனை குறைக்க முடியும் எனவும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. H.I.V. தொற்று ஏற்பட்டு தாக்கம் அதிகரித்த நிலையிலும் இன்னும் பலர் அதற்கான மருந்தினை பெறுவதற்கு முன்வரவில்லை எனவும், உலகெங்கிலும் H.I.V. தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 390 இலட்சத்தை எட்டியுள்ள நிலையிலும், அதில் அரைவாசிக்கும் குறைவானோரே அதற்கான சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.