லங்காபுத்ர வங்கியினால் சுயதொழில் முயற்சியாளர்களுக்கான ஊக்குவிக்கும் செயல்திட்டங்கள்
(லியோன்)
லங்காபுத்ர வங்கியினால் நாடளாவிய ரீதியில் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிற்கும் ஒவ்வொரு தொழில் முயற்சியாளர் உருவாக்கும் "சியபத் புபுதுவ “ திட்டம் ஆரம்பிக்கப்பட்டு ,சுயதொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் செயல்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது .
இதன் ஆரம்ப நிகழ்வு மட்டக்களப்பு லங்காபுத்ர வங்கி முகாமையாளர் எஸ் கேகாந்த் தலைமையில் மட்டக்களப்பு செல்வநாயகம் மண்டபத்தில் இன்று நடைபெற்றது .
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை லங்காபுத்ர வங்கி தலைவர் லசந்த குணவர்த்தன கலந்துகொண்டார் .
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான ஆரம்பிக்கப்பட்ட முதல் நிகழ்வில் சுயதொழில் முயற்சியாளர்களுக்கு கடன் உதவிகளும் , கடந்த காலங்களில் லங்காபுத்ர வங்கியின் கடன் உதவியுடன் திறமையாக சுயதொழிலில் ஈடுபட்ட சுயதொழில் முயற்சியாளர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் , பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டது .
இந்நிகழ்வில் இலங்கை லங்காபுத்ர வங்கி உத்தியோகத்தர்கள் , மட்டக்களப்பு வங்கி கிளையின் உத்தியோகத்தர்கள் , மாவட்ட சுயதொழில் முயற்சியாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர் .