புலம்பெயர் எழுத்தாளர்களின் அனுசரணையில் 45 வது இலக்கிய சந்திப்பு சத்துருக்கொண்டானில்.
புலம்பெயர் எழுத்தாளர்களின் அனுசரணையில் 45 வது இலக்கிய சந்திப்பு பேராசிரியர் செ .யோகராசா தலைமையில் மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் சர்வோதய மண்டபத்தில் காலை 09.00 மணியளவில் ஆரம்பமானது .
இலக்கிய சந்திப்பு நிகழ்வில் மலையகம் – வரலாறும் வாழ்வியலும் எனும் தொனிப்பொருளில் இலங்கையின் இந்தியத் தமிழர்களும் தமிழ்நாட்டின் சிலோன்காரர்களும் ,மலையக இலக்கியத்தின் தோற்றுவாயாக நாட்டாரியல் , மலையக புனைவு இலக்கியம் , மலையக ஆய்வு இலக்கியமும் திறனாய்வும் மற்றும் இலங்கை அரச நிர்வாகத்தில் மலையகம் சந்திக்கும் சவால்கள் என்ற 05 தலைப்பிலான ஆய்வுகளும் கட்டுரைகளும் இடம்பெற்றன .
இடம்பெற்ற இலக்கிய சந்திப்பு நிகழ்வில் இலக்கியவாதிகளான மல்லியப்பு சந்தி திலகர் ,மு .சிவலிங்கம் , தெளிவத்தை ஜோசப் ,லெனின் மதிவானம் , இரா .ரமேஸ் மற்றும் பேராசிரியர்கள் , இலக்கிய ஆய்வாளர்களும் ,எழுத்தாளர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர் .
( நியூவற்றி அமிர்தகழி நிருபர் )
( நியூவற்றி அமிர்தகழி நிருபர் )