கூழாவடி ஸ்ரீ நாககன்னி அம்பாள் ஆலயத்தின் கும்பாபிசேகத்தை முன்னிட்டு பால்குட பவனியும் 108 சங்காபிசேகமும்.
மட்டக்களப்பு கூழாவடி ஸ்ரீ நாககன்னி அம்பாள் ஆலயத்தின் கும்பாபிசேக தின பூர்த்தியை முன்னிட்டு பால்குட பவனியும் 108 சங்காபிசேகமும் நேற்று காலை ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்றது. நேற்று காலை மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் இருந்து பால் குட பவணி ஆரம்பமானது.
பால்குட பவனியானது ஆலயத்தினை சென்றடைந்ததும் அடியார்கள் கொண்டுசென்ற பால் ஆலய பரிவார மூர்த்தி ஸ்ரீ நாகாதம்பிரான் சுவாமிக்கு அபிசேகம் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து விசேட யாகபூஜை நடைபெற்றதுடன் ஆலய பரிவார மூர்த்தி ஸ்ரீ நாகாதம்பிரான் சுவாமிக்கு 108 சங்காபிஷேக விசேட பூஜைகள் நடாத்தப்பட்டது. பூஜையினை தொடர்ந்து பிரதான கும்பம் மற்றும் பரிபால மூர்த்திகளின் கும்பங்கள் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு ஆலய பரிவார மூர்த்தி ஸ்ரீ நாகாதம்பிரான் சுவாமிக்கு அபிசேகம் செய்யப்பட்டது.
இந்த உற்சவத்தில் பெருமளவான அடியார்கள் கலந்துகொண்டனர் . கூழாவடி ஸ்ரீ நாககன்னி அம்பாள் ஆலய வருடாந்த மகா சடங்கு விழா 25.08.2015 இன்று செவ்வாய்க்கிழமை மாலை திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி எதிர்வரும் 30.08.2015 ஞாயிற்றுக்கிழமை அம்பாளின் திருக்கும்பம் சொரிதலுடன் இனிதே நிறைவு பெரும் .