எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தபால் மூலம் வாக்களிக்க 9842 பேர் தகுதி
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தபால் மூலம் வாக்களிக்க 9842 பேர் தகுதி பெற்றுள்ளதாக மாவட்ட தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்காக இம்மாவட்டத்தில் 176 தபால் வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன . மட்டக்களப்பு ,பட்டிருப்பு ,கல்குடா ஆகிய தேர்தல் தொகுதிகளில் பாடசாலைகள் ,பொலிஸ் நிலையங்கள் ,அரச அலுவலகங்களில் குறித்த வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன . இம்மாவட்டத்தில் தேர்தல் கடமைகளில் ஈடுபடவுள்ள பொலிஸ் அதிகாரிகள் மற்றும் உயர்தரப்பரீட்சையில் கடமையாற்றவுள்ள ஆசிரியர்கள் இன்று தமது தபால் மூல வாக்கு பதிவினை மேற்கொண்டனர் .
லியோன்