Breaking News

ஸ்ரேயாவுக்கு ஏன் முக்கியத்துவம்.. மலையாளிகளைப் பாட வைக்கலாமே?

ஸ்ரேயாவுக்கு ஏன் முக்கியத்துவம்.. மலையாளிகளைப் பாட வைக்கலாமே? கேட்கிறார் சித்ரா

மலையாள இசையமைப்பாளர்கள் பலரும் ஸ்ரேயா கோஷலுக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுப்பது ஏன் என்று பிரபல பின்னணிப் பாடகி சித்ரா கேட்டுள்ளார். ஸ்ரேயா சிறந்த பாடகி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை ஆனால் மலையாளத்தில் நன்றாக பாடக்கூடியவர்கள் நிறைய பேர் இருக்கிறார்களே என்று கூறியுள்ளார் சித்ரா. சினிமா உலகில் நடிகைகள் இடையே மட்டும் போட்டியில்லை பாடகிகள் இடையேயும் போட்டி இருக்கத்தான் செய்கிறது. இன்றைய கால கட்டத்தில் ஏராளமான இசையமைப்பாளர்களும், பாடகர்களும் பாடகிகளும் வந்து கொண்டுதான் இருக்கின்றனர். ஆனால் ஒருசிலர் காட்டில் மட்டுமே அடைமழை கொட்டுகிறது. இளைய தலைமுறையினருக்கு வழிவிட்டு சில பாடகர்களும் பாடகிகளும் டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு நடுவர்களாகிவிட்டனர்.