Breaking News

73 வயது மூதாட்டியை கற்பழித்து கொன்ற கொடூரன்

அமெரிக்காவில் 73 வயது மூதாட்டியை கற்பழித்து கொலை செய்துவிட்டு அவருடைய இரண்டு வயது குழந்தையை பாலியல் வன்புனர்வு செய்த கொடூர நபருக்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.  அலாஸ்கா மாகாணத்தில் உள்ள அன்கோரேஜ் நகரில் டச் சீ (71), சோர்ன் ஸ்ரிப் (73) என்ற வயதான தம்பதியினர் இரண்டு வயதான பேத்தியுடன் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த மே மாதம் 2013ம் ஆண்டு இந்த தம்பதிகளின் வீட்டில் ஒரு கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. முதிய தம்பதிகளை தொடர்ந்து கண்காணித்து வந்த ஜெரி ஆக்டீவ் (26) என்ற நபர் அவர்களது வீட்டில் வேறு எவறும் இல்லாத தருணத்தில் நுழைந்துள்ளான். காமவெறிப்பிடித்த அந்த நபர், நடக்க முடியாத நிலையில் இருந்த 73 வயது மூதாட்டியை பலவந்தமாக கற்பழித்துள்ளான். பின்னர், கொடூரமான ஆயுதத்தை கொண்டு அவரை தாக்கியுள்ளான். இதனை தடுக்க வந்த 71 வயதான கணவரையும் அதே ஆயுதத்தில் பயங்கரமாக தாக்கியுள்ளான். இந்த தாக்குதலில் படுமோசமாக காயமடைந்த தம்பதிகள் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். பின்னர், அவர்களது வீட்டில் இருந்த இரண்டு வயது குழந்தையையும் அந்த காம பிசாசு, பாலியல் வன்புணர்வு செய்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே பல பாலியல் தொடர்புடைய குற்றங்களில் சிறை தண்டனை பெற்ற அந்த நபர் இந்த இரட்டை கொலை நிகழ்ந்த சில தினங்களுக்கு முன்னர் தான் சிறையில் இருந்து விடுதலை ஆகியுள்ளான். இந்த கொலை சம்பவம் பொலிசாருக்கு தெரிய அந்த காமவெறிப்பிடித்தவனை கைது செய்து சிறையில் அடைத்தனர். குற்றவாளி மீது குழந்தைகளை வன்புணர்வு செய்ததாக ஏற்கனவே பல புகார்கள் இருந்துள்ளது. பொலிசாரின் விசாரணையில் தான் இந்த கொலைகளை செய்யவில்லை என பல மாதங்களாக கூறி வந்துள்ளான். ஆனால், அவனது மரபணுவை சோதித்த பொலிசாருக்கு இரண்டு கொலைகளையும் ஜெரி ஆக்டீவ் தான் செய்தான் என்பது நிரூபனமானது. இந்த வழக்கு அலாஸ்காவில் உள்ள நீதிமன்றத்திற்கு வந்தபோது, முதியவரை கற்பழித்து கொன்றது, தடுக்க வந்த கணவரை தாக்கி கொலை செய்தது, மேலும் இரண்டு வயது குழந்தையை பாலியல் வன்புணர்வு செய்தது உள்ளிட்ட குற்றங்களுக்காக ஜெரிக்கு 359 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளார்.