Breaking News

சுதந்திரக் கட்சியில் இனி இணைமாட்டேன்

மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர இனி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொள்ளப் போவதில்லை என தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டு வாக்காளர்களுக்கு துரோகம் இழைக்கப் போவதில்லை. மஹிந்த ராஜபக்சவின் பக்கத்தில் இனி எந்தக் காலத்திலும் நிற்கப் போவதில்லை. 2013ம் ஆண்டில் மேல் மாகாணசபைத் தேர்தலில் வெற்றியீட்டிää கொலன்னாவ பிரதம அமைப்பாளர் பதவியை மஹிந்த ராஜபக்சவிடம் கோரியிருந்தேன். “தந்தையைப் போன்று மரணிக்க விருப்பமா” என மஹிந்த என்னிடம் கேள்வி எழுப்பினார். மஹிந்தவின் இந்தக் கேள்வி என்னை பெரிதும் அதிருப்தி அடையச் செய்தது. தந்தையை கொலை செய்த அடுத்த நாளே ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ளத் தீர்மானித்தேன். எனினும் அப்போதைய ஆளும் கட்சி அமைச்சர்கள் சிலர் அதனைத் தடுத்தனர் என ஹிருணிகா பிரேமசந்திர தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் தெரிவித்துள்ளார்.