தென்னிந்தியாவில் இன்னும் நம்பர் 1... நயன்தாராதான்!
2014 & 2015 ம் ஆண்டில் பிரபல நிறுவனம் ஒன்று எடுத்த சர்வே முடிவுகளில் தென்னிந்தியாவிலேயே, மிக அதிகமாக சம்பாதிக்கும் 10 பணக்கார நடிகைகள் இவர்கள் தான் என்று கீழ்க்கண்டவாறு பட்டியலிட்டு இருக்கிறது. நடித்த படங்கள், விளம்பரங்கள், மார்க்கெட் வேல்யூ ஆகியவற்றை கணக்கில் கொண்டு எடுத்திருக்கும் இந்த முடிவுகளில் ஒவ்வொருவரும் வாங்கும் சம்பளம், நடிக்கும் படங்கள் மற்றும் நடித்து சம்பாதித்த பணம் ஆகியவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் அதிகம் சம்பாதிக்கும் அழகிகளைப் பற்றி ஒரு பார்வை இங்கே. நம்பர் 1 நயன்தாரா என்னதான் படங்கள் தோல்வி அடைந்தாலும் அம்மணியின் புகழோ, மதிப்போ சற்றும் குறையவில்லை. தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் வெளுத்துக் கட்டும் நயன்தாரா ஒரு படத்திற்கு 2 - 3 கோடிவரை வாங்குவதாக கேள்வி. அம்மணியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா 10 மில்லியன் டாலர்களாம்.



