Breaking News

சானியா மிர்சாவுக்கு அபராதம்

விதிமுறைக்கு மாறான நம்பர் ப்ளேட் பயன்படுத்தியதால் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா பல அறிய சாதனைகளுக்கு சொந்தமான பெருமைக்குரிய இந்திய மகள் ஆகும். இவர் நேற்றிரவு ஹைதராபாத்தில் நடைபெற்ற வாகன சோதனையின் போது விதிமுறைக்கு மாறாக நம்பர் பிளேட் பயன்படுத்துவது தெரியவந்தது. இதனால் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக , சானியா மிர்சாவிற்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.