அமெரிக்காவில் மேயராகப் பொறுப்பேற்றுள்ள 3 வயது சிறுவன்
அமெரிக்காவின் மின்னெசோட்டா மாநிலத்தின் வடபகுதியிலுள்ள டோர்செட் என்கிற ஊருக்கு 3 வயது சிறுவன் மேயராகப் பதவியேற்றுள்ளார். அமெரிக்காவிலுள்ள டோர்செட் என்ற ஊரில் 22 குடும்பங்கள் மட்டுமே வசித்து வருகின்றன. இந்த ஊருக்கு மேயராக விருப்பமுள்ளவர்கள் ஒரு அமெரிக்க டாலர் கொடுத்து பதிவு செய்துகொள்ளலாம். பின்னர் குலுக்கல் முறையில் மேயர் தேர்வு செய்யப்படுவார். இதன் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் நபர் ஓராண்டுகாலம் மேயராக பணியாற்றலாம் என்ற நடைமுறை உள்ளது. அதன்படி, தற்போது புதிய மேயராக 3 வயது நிரம்பிய ஜேம்ஸ் என்ற சிறுவன் தேர்வு செய்யப்பட்டு பொறுப்பேற்றுள்ளார். இந்த சிறுவனின் சகோதரன் ராபர்ட் டஃப்ட்ஸ் என்ற ஆறுவயது சிறுவன் மேயர் பதவி வகித்தவராவார். இந்நிலையில், தனது இரண்டு மகன்களும் இந்த சிறு வயதிலேயே மேயராகப் பதவியேற்று ஊர் மக்களின் நன்மைக்காக பாடுபடுவது தனக்கப் பெருமையாக இருப்பதாக அந்த சிறுவனின் தாயார் தெரிவித்துள்ளார்.