தவறுதலாக மயக்க மருந்தை தனக்குத்தானே செலுத்தி உயிரிழந்த வைத்திய நிபுணர்
பல இரவுகள் தூக்கமின்மையால் வருந்திய வைத்திய நிபுணர் ஒருவர் தவறுதலாக அளவுக்கதிமான மயக்க மருந்தை தனக்குத்தானே செலுத்தியதன் காரணமாக உயிரிழந்த சம்பவமொன்று அமெரிக்காவில் பதிவாகியுள்ளது. குறித்த மருந்து அமெரிக்காவில் மரணதண்டனைக் கைதிகளுக்கு செலுத்தப்படுவது எனவும், ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்த மைக்கல் ஜாக்ஸனின் இரத்தத்திலும் இவ்வகை மருந்து காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறுது. செமசெட, டவன்டன், மஸ்குரோவ் பார்க் வைத்தியசாலையில் நோயாளிகளுக்கு மயக்க மருந்தேற்றுபவரான டாக்டர் டேவிஸ் உறங்கச் செல்வதற்கு முன்னதாக தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்காக இந்த மருந்தை பயன்படுத்தியதாக மரண விசாரணையின்போது தெரியந்தது. இரு பிள்ளைகளின் தந்தையான மைக் டேவிஸ் 43 வயது வைத்திய நிபுணரே இவ்வாறு உயிரிழந்தவராவார். இவர் ஏற்கனவே வீட்டுக்கு மருந்துகளை எடுத்துச் செல்வதற்காகக் கண்டிக்கப்பட்டிருந்தவர் என்பதோடு சுய மருத்துவ சிகிக்சைக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தவராவார். இவரது உடல் அவரது மாhமியாரின் இல்லத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அவரது சடலத்திற்கருகில் மருந்து செலுத்தும் ஊசியும் அவரது பாதங்களில் இரண்டு அடயாளங்களும் காணப்பட்டன.
எம்.ஐ.அப்துல் நஸார்