ரூ. 4.5 மில்லியனுடன் மட்டக்களப்பைச் சேர்ந்தவர் கைது
சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு பணத்தை கொண்டுசெல்ல முயன்ற மட்டக்களப்பைச் சேர்ந்த சந்தேகநபரொருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். செவ்வாய்க்கிழமை அதிகாலை 1.15 மணியளவில் சிங்கப்பூருக்கு அவர் இந்த சட்டவிரோத வெளிநாட்டு பணத்தை கடத்த முயன்றுள்ளார். கைப்பற்றப்பட்ட பணத்தின் மொத்த பெறுமதி சுமார் 45 இலட்சத்துக்கும் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.