Breaking News

சானியா மிர்ஸாவுக்கு இந்தியாவின் உயர் கௌரவம்

இந்தியாவின் டெனிஸ் வீராங்கனையான சானியா மிர்ஸாவுக்கு விளையாட்டுத்துறைக்கான உயர் விருதான ராஜிவ் காந்தி கெஹெல் ரத்னா என்ற விருது வழங்கப்படவுள்ளது.

இந்த உயர் கௌரவத்தைப் பெறும் இரண்டாவது நபர் இவராவார் இதற்கு முன்னதாக இந்த விருது லீன்டர் பயெஸூக்கு (1996 – 1997) வழங்கப்பட்டது. 

இந்த மாததத்தின் ஆரம்பத்தில் விம்பிள்டன் இரட்டை ஆட்ட சம்பியன் ஒருவருக்கே வழங்க்கட வேண்டுமென விளையாட்டுத்துறை அமைச்சு சிபார்சு செய்திருந்தது எனினும் விருது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் விருதுக் குழுவிடமே வழங்கப்பட்டிருந்தது. 

சானியா முதன் முறையாக பெண்களுக்கான இரட்டையர் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தினை சுவிஸ் வீராங்கனையான மார்டினா ஹின்ஜிஸ்ஸூடன் இணைந்து கடந்த ஜூலை மாதம் வென்றிருந்தார்.
எம்.ஐ.அப்துல் நஸார்