சிம்புவின் அச்சம் என்பது மடமையடா ரிலீஸ் அப்டேட்: உற்சாகத்தில் ரசிகர்கள்
சிம்பு – கெளதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் வெளியான விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் வெற்றியை அடுத்து இக்கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ள அச்சம் என்பது மடமையடா படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. டீசரை பார்த்த பெரும்பாலோனார் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் இரண்டாம் பாகத்தை போன்று இப்படம் உருவாகியுள்ளதாக கூறுகின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான இப்படத்தின் பாடல்களை விரைவில் வெளியிட உள்ளனர். மேலும் வரும் நவம்பர் மாதத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர் படக்குழு.



