மட்டக்களப்பு கல்லடி டச்பார் தூய இஞ்ஞாசியார் ஆலய வருடாந்த திருவிழா திருப்பலி நேற்று காலை 07.00 இடம்பெற்ற விசேட கூட்டுத்திருப்பலியுடன் நிறைவு பெற்றது .
மட்டக்களப்பு கல்லடி டச்பார் தூய இஞ்ஞாசியார் ஆலய வருடாந்த திருவிழா கடந்த 24.07.2015 வெள்ளிக்கிழமை ஆலய பங்கு தந்தை இயேசு சபை துறவி லோரன்ஸ் லோகநாதன் தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது .
தொடர்ந்து நவநாள் காலங்களில் சிறப்பு மறை உரைகளும் மற்றும் விசேட திருப்பலிகளும்இடம்பெற்றதுடன் 01.08.2015 சனிக்கிழமை மாலை புனிதரின் திருவுருவ பவனியும் அதனைதொடர்ந்து விசேட நற்கருணை வழிபாடுகளும் இடம்பெற்றது .
ஆலய திருவிழா திருப்பலி இன்று காலை 07.00 மணிக்கு அருட்தந்தை திருட்செல்வம் தலைமையில் ஆலய பங்கு தந்தை இயேசு சபை துறவி லோரன்ஸ் லோகநாதன், அருட்தந்தை மேரி ஜோசெப் ஆகியோர் இணைந்து திருவிழா திருப்பலியை ஒப்புகொடுத்தனர் .
திருவிழா திருப்பலியில் விசேட மறை உரைகள் இடம்பெற்றதுடன் ஆலய திருவிழா நிகழ்வின் இறுதி நிகழ்வாக புனிதரின் திருவுருவ ஆசிருடன் ஆலய கொடி இறக்கப்பட்டு ஆலய வருடாந்த திருவிழா இனிதே நிறைவு பெற்றது .
ஆலய திருவிழா திருப்பலியில் பெருமளவான மக்கள் கலந்து சிறப்பித்தனர் .
(லியோன்)


