Breaking News

உடல் பருமனுக்கு காரணமான மரபணு கண்டுபிடிப்பு - 14-3-3 ஜீட்டா...

உடல் பருமனுக்குக் காரணமான மரபணுவைக் கண்டறிந்துள்ளனர் கனடா நாட்டு விஞ்ஞானிகள். இந்த மரபணு 14-3-3 ஜீட்டா என வகைப்படுத்தப் பட்டுள்ளது. உடல் பருமன் என்பது சர்வதேசப் பிரச்சினையாக உள்ளது. உலகம் முழுவதும் பல லட்சம் பேர் உடல் பருமன் பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறார்கள். அறிவியல் வளர்ச்சியால் எல்லா வேலைகளுக்கும் இயந்திரங்கள் வந்து விட்டது. இதனால் மனித உடல் உழைப்பு என்பது மிகவும் குறைந்து விட்டது. இதன் காரணமாக எண்ணிலடங்கா நோய்த் தாக்குதலுக்கு ஆளாகிறான் மனிதன். அதோடு ஒபேசிடி எனும் உடல் பருமனும் அவனைத் தாக்குகிறது.

மரபணு காரணமாக... உடல் உழைப்பு இல்லாததால் மட்டுமின்றி, சிலருக்கு மரபணு காரணமாகவும் உடல் பருமன் ஏற்படுகிறது. ஆனால், உடல் பருமனே இதய நோய் உள்ளிட்டப் பல்வேறு பிரச்சினைகளுக்கு முக்கியக் காரணமாகவும் அமைந்து விடுகிறது.