Breaking News

ஆளுமையுள்ள அரசியல் தலைமைகள் எதிர்வரும் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட வேண்டும்

ஆளுமையுள்ள அரசியல் தலைமைகள் எதிர்வரும் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட வேண்டுமென முன்னாள் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய மக்கள் சுததந்திரக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்ததார்.

பாராளுமன்றத்தில் ஹிஸ்புல்லாஹ் என்ற தலைப்பிலமைந்த அவரது பாராளுமன்ற உரைகளின் தொகுப்பு இன்று (12) மாலை ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் ஆறு தேர்தல்களில் போட்டியிட்டு நான்கு தடவைகள் வெற்றியீட்டியிருக்கிறோம். இந்த நான்கு தடவைகளிலும் இந்த நாட்டுக்காக, இந்த மக்களுக்காக, இந்த மாவட்டத்திற்காக என்னால் முடிந்த சேவையினை ஆற்றியுள்ளேன்.

சிலர் பாராளுமன்றத்தில் வெறுமனே உரையாற்றுவதை மாத்திரம் தொழிலாகக் கொண்டவர்கள். நான் அவ்வாறு பாராளுமன்றத்திலே உரையாற்றுவது மாத்திரமல்ல அதன் மூலம் இந்த மக்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகளையும், தேவைகளையும் பெற்றுக்கொடுத்துள்ளோம். அந்த வகையில் மன நிறைவோடு இந்த நூலை வெளியிடுகின்றோம்.

எதிர்வருகின்ற பாராளுமன்றம் என்பது கடந்த காலங்களைப் போலல்ல ஒரு சட்டசபையாக நாங்கள் இருக்கப் போகிறோம். எதிர்வருகின்ற பாராளுமன்றத்திலே தெரிவு செய்யப்படுகின்ற உறுப்பினர்கள் ஒரு வருட காலத்திற்கு சட்டத்தை இயற்றப் போகின்றார்கள்.

ஆகவே, முதலாம் திகதி பாராளுமன்றம் கூடியதும் ஒரு வருட காலம் இந்த நாட்டிலே குறிப்பாக தேர்தல் சட்டத்தை திருத்த இருக்கிறோம். இன்று எங்களுடைய பிரதிநிதித்துவம் 20ஆக இருக்கிறது அதனை எந்த வகையிலும் குறையாமல் பாதுகாக்க வேண்டும்.

என்னுடைய பாராளுமன்ற உரையிலே மலையக மக்களின் பிரதிநிதிதித்துவம் பற்றியும் பேசியிருக்கிறேன். ஏiனெனில் மலையக மக்கள் இந்த நாhட்டிலே 7.5 வீதம் வாழ்கிறார்கள். உண்மையில் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கு இருக்க வேண்டும். ஆனால் தற்போது மலையகத்தை சேர்ந்தோர் எல்லா கட்சிகளிலுமாக 08 பேர்தான் அதாவது அரைப் பங்குதான் இருக்கிறார்கள். இந்தப் புதிய சட்டமூலம் வந்தால், மூன்று பேர் கூட தெரிவாக முடியாது. இதனை நான் பாராளுமன்றத்திலே பேசினேன்.

எதிர்வரும் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படுகின்றவர்கள் வெறுமனே பாதைகள், பாடசாலைகள் மற்றும் பாலங்கள் கட்டுபவர்களல்ல, புதியு அரசியலமைப்பிலே சிறுபான்மையினரின் குறிப்பாக முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்படுகின்ற வகையிலே சட்டத்தை உருவாக்குகின்ற ஆளுமையுள்ள அரசியல் தலைமைகள் எதிர்வரும் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

நூல் வெளியீட்டு விழாவில் நூல் அறிமுகம் மூத்த எழுத்தளரும், ஊடகவியலாளரும், மகளிர் விவகார அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகருமான சிவலிங்கம் சதீஷகுமாரினால் செய்து வைக்கப்பட்டது. நூல் விமர்சனம் தென்கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறை சிரேஷ'ட விரிவுரையாளரான கலாநிதி ஏ.எப்.எம்.அஷ்ரபினால் செய்யப்பட்டது. இந் நிகழ்வின் சிறப்புரை தினகரன் வார மஞ்சரியின் பிரதம ஆசிரியர் செந்தில் வேலரால் நிகழ்த்தப்பட்டது.
எம்.ஐ.அப்துல் நஸார்