Breaking News

2015 பொதுத்தேர்தல் இன்று ஆரம்பம்

2015ஆம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு பதிவுகள் இன்று திங்கட்கிழமை (17) காலை 7 மணிக்கு ஆரம்பமாகியது. இந்த வாக்களிப்பு பதிவுகள் இன்று மாலை 4 மணிவரை நடைபெறவுள்ளது. 2015ஆம் ஆண்டுகான பொதுத்தேர்தலுக்காக 35 அரசியல் கட்சிகளிலிருந்தும் 200 சுயேட்சை குழுக்களிலிருந்தும் மொத்தமாக 6,151 வேட்பாளர்கள், 196 நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்காக போட்டியிடுகின்றனர். இதன்பிரகாரம் நாடளாவிய ரீதியில் 12,314 வாக்களிக்கும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதனுள் வட மாகாணத்திலுள்ள 7 சிறுதீவுகளும் உள்ளடங்குகின்றன. தேர்தல்கள் திணைக்களத்தின் அறிக்கையின் பிரகாரம் 15,440,491 மக்கள் இம்முறை வாக்களிப்புக்கு தகுதியுடையோராக உள்ளனர். தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக 70,549 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் நாடளாவிய ரீதியில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், 4,825 விசேட அதிரடிப்படையினரும், 7,000 சிவில் பாதுகாப்புப் படைப்பிரிவினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.