Breaking News

அபுதாபியில் முதல்முறையாக கோவில் கட்ட நிலம் வழங்கும் அரசு

அபுதாபியில் வசிக்கும் இந்து சமூகத்தினர் வணங்க கோவில் கட்ட நிலம் வழங்க அமீரக அரசு முடிவு செய்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக ஞாயிற்றுக்கிழமை கிளம்பி ஐக்கிய அரபு அமீரகம் சென்றார். டெல்லியில் இருந்து கிளம்பிய அவர் அபுதாபி சென்றடைந்தார். அங்கு அவர் தலைவர்கள், அரசு அதிகாரிகளை சந்தித்து பேசினார். இந்நிலையில் அபுதாபியில் வசிக்கும் இந்திய சமூகத்தினர் வழிபட அங்கு கோவில் ஒன்றை கட்ட நிலம் வழங்க அமீரக அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் விகாஷ் ஸ்வரூப் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, இந்திய சமூகத்தின் நீண்ட கால காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. பிரதமர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வேளையில், அபுதாபியில் கோவில் கட்ட நிலம் வழங்க அமீரக அரசு முடிவு செய்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.