ஆகஸ்ட் 17ஆந் திகதி உங்களுக்கு விருப்பமான பிரதமரையும் அரசாங்கத்தையும் தோந்தெடுக்கும் சந்தர்ப்பம் ...
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் குளியப்பிட்டிய பஸ் நிலையத்திற்கு முன்பாக நோற்று (11) மாலை நாடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் ஜனவரி 08ஆந் திகதி உங்களுக்கு விருப்பமான ஜனாதிபதியைத் தேர்ந்தொடுத்தீர்கள், ஆகஸ்ட் 17ஆந் திகதி உங்களுக்கு விருப்பமான பிரதமரையும் அரசாங்கத்தையும் தோந்தெடுக்கும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. ஆகஸ்ட் 17ஆந் திகதி நீங்கள் எடுக்கும் தீர்மானம் என்ன?
பொதுமக்களின் சொத்துக்களை சூறையாடிய பிரதமரையும் அரசாங்கத்தையும் தோந்தெடுப்பதா? இல்லையெனில் திருட்டில் ஈடுபடாத பிரதமரையும் அரசாங்கத்தையும் தோந்தெடுப்பதா? தனது குடும்பத்தை மாத்திரம் வளப்படுத்திய பிரதமரையும் அரசாங்கத்தையும் தோந்தெடுப்பதா? இல்லையெனில் உங்கள் குடும்பத்தை வளப்படுத்தும் பிரதமரையும் அரசாங்கத்தையும் தோந்தெடுப்பதா? பொருட்களின் விலைகளைக் குறைக்க முடியாத, சம்பளத்தை அதிகரிக்க முடியாத பிரதமரையும் அரசாங்கத்தையும் தோந்தெடுப்பதா? இல்லையெனில் பொருட்களின் விலைகளைக் குறைக்கக்கூடிய சம்பளத்தை அதிகரிக்கக்கூடிய வருமானத்தை அதிகரிக்கக்கூடிய பிரதமரையும் அரசாங்கத்தையும் தோந்தெடுப்பதா? மைத்திரி நிருவாகத்துடன் முரண்படுகின்ற பிரதமரையும் அரசாங்கத்தையும் தோந்தெடுப்பதா? இல்லையெனில் மைத்திரி நிருவாகத்துடன் முன்கொண்டு செல்கின்ற பிரதமரையும் அரசாங்கத்தையும் தோந்தெடுப்பதா?
இதனைத்தான் நீங்கள் ஆகஸ்ட் 17ஆந் திகதி தீர்மானிக்க வேண்டும். இதனை சிந்தித்து மஹிந்த ராஜபக்ஷவின் கூட்மைப்பினை தெரிவுசெய்வதா? அல்லது என்னையும் ஐக்கிய தேசியக் கட்சியையும் தேர்வு செய்வதா? என்பதனையே நீங்கள் தீர்மானிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
குருநாகல் மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் அகிலவிராஜ் காரியவசத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப் பிரச்சாரக் கூட்டத்திற்கு குருநாகல் மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் உள்ளிட்ட பெருந்nhகையானோர் கலந்துகொண்டிருந்தனர்.
எம்.ஐ.அப்துல் நஸார்