இரண்டு பஸ்கள் மோதி விபத்து 21 பேர் படுகாயம்
இன்று காலை கொழும்பு-கண்டி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சுமார் 21 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸூடன் தனியார் பஸ்ஸொன்று நேருக்கு நேர் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்து தொடர்புடைய மேலதிக விசாரணைளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



