மட்டக்களப்பில் பல்வேறு கொள்ளையுடன் தொடர்புடைய இரு மாணவர்கள் கைது!
அத்துடன் இவர்கள் கொள்ளையிட்ட இரண்டு கையடக்கத் தொலைபேசிகளையும் வாவியில் வீசி விட்டதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாகவும் காத்தான்குடி பொலிசார் சுட்டிக்காட்டினர். கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் காத்தான்குடி முதலாம் குறிச்சியைச் சேர்ந்த மாணவர்கள் எனவும் அதில் ஒரு சந்தேகநபர் இவ் வருடம் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எழுதவுள்ள மாணவர் எனவும் காத்தான்குடி பொலிசார் மேலும் குறிப்பிட்டனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள்; இன்று (03) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.