நீங்க மட்டும் போனாப் போதும்... அவங்கெல்லாம் வேண்டாம்..
இலங்கை பயணத்தின்போது வீரர்கள் மட்டுமே செல்ல முடியும் என்றும் அவர்களுடன் மனைவியரோ அல்லது காதலியரோ செல்லக் கூடாது என்றும் இந்திய வீரர்களுக்கு கிரிக்கெட் வாரியம் மீண்டும் தடை போட்டுள்ளது. இந்த வாரத்தில் இந்திய அணிக்கும், இலங்கைக்கும் இடையிலான கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. இதற்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இந்த நிலையில் வீரர்களுடன் மனைவி அல்லது காதலிகள் செல்ல தடை விதித்துள்ளதாம் பிசிசிஐ. இதனால் வீரர்கள் மத்தியில் அதிருப்தி நிலவுவதாகவும் கூறப்படுகிறது.



