Breaking News

போதைக்கு அடிமையான தாய் - நாயிடம் பால் குடித்து வளரும் குழந்தை..!!

சிலி நாட்டின் அரிகா நகரைச் சேர்ந்தவர் லோரோ எஸ்கிடிரோ  இவர் தனது வீட்டின் அருகே  இருந்த பூட்டி கிடந்த மெக்கானிக் ஷாபில் இருந்து சத்தம் வருவதை அடிக்கடி கேட்டார். அங்கு சென்று பார்த்த போது உடல் மெலிந்த நிலையில் ஊட்டசத்து இன்றி உடலில் ஆடை இல்லாத ஒரு 2 வயது சிறுவன் அவர்களது வீட்டு நாயிடம் பால் குடித்து கொண்டு இருப்பதை பார்த்து ஆச்சரியப்பட்டார்.   உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார் போலீசார் சிறுவனை மீட்டு. குழந்தை வளர்ப்பு இல்லத்தில் சேர்த்தனர்.  கணவன் மனைவி பிரிவால் குழந்தை அனாதையாக்கப்பட்டு உள்ளது. தாயார் மது போதைக்கு ஆளாகி குழந்தையை வீடு விட்டு சென்று உள்ளார்.கணவன் மனைவி விவாகாரத்து  வழக்கு நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 22 குடும்ப நீதிமன்ற விசாரணையில் குழந்தை யாரிடம் இருக்கும் என்பதை தீர்மானிக்கும். இது குறித்து போலீசார் கூறும் போது  சிறுவனின் தாயார் மது போதைக்கு ஆளாகி மருத்துவமனையில் உள்ளார். சிறுவனுக்கு ஊட்டச்சத்தின்மை சிகிச்சை அளிக்கபடுகிறது.சிறுவனுக்கு தோல் நோய் மற்றும் தலையில் பேன் அதிகம் உள்ளது. ஆனால் அவரது தாயாரை கைது செய்ய முடிய வில்லை என கூறினர். இது குறித்து  லோரோ எஸ்கிடிரோ கூறும் போது:- எங்கள் நாய் கர்ப்பமாக உள்ளது. அந்த சிறுவன் யார் என தெரியவில்லை. சிறுவன் பசி கொடுமைதாங்காமல் நாயிடம் பால் குடித்து உள்ளான்.ஒரு தாயாக இருந்து இந்த காட்சியை பார்க்கும் போது மிகவும் வேதனையாக உள்ளது.  நாம் அனைவரு பெற்றோராக இருக்கிறோம்.  நீங்கள்  ஒரு தாயாக குழந்தியை பார்த்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.