கிழக்கு மாகாண வீதி போக்குவரத்து அதிகார சபையின்கீழ் நேரக்காப்பாளர்களுக்கான நியமனம்
கிழக்கு மாகாண வீதி போக்குவரத்து அதிகார சபையின் கீழ் நேரக்காப்பாளர்களுக்கான நியமனம் இன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமதினால் ஏறாவூர் அல் முனீறா பாலிகா மகாவித்தியாலயத்தில் வைத்து வழங்கப்பட்டது.
குறிப்பிட்ட நியமனம் அம்பாரை, மட்டக்களாப்பு, திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களில் இருந்தும் 15 பேருக்கு வழங்கிவைக்கப்பட்டன. இந் நிகழ்வில் வீதி போக்குவரத்து அதிகார சபை பணிப்பாளர் நாயகம் டப்ளிவ்.எம்.எச். உதயகுமார், மற்றும் பல அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.


