சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தின் 207 வது வருடாந்த திருவிழா
(அமிர்தகழி நிருபர் )
கிழக்கிலங்கையில் பிரசித்தி பெற்ற திருத்தலமான சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தின் 207 வது வருடாந்த திருவிழா திருப்பலி திருகோணமலை மறைமானில் ஆயர் கிறிஸ்ரியன் நோயல் இம்மானுவல் ஆண்டகை தலைமையில் பங்குதந்தை திருச்செலம் ,அருட்பணி தேவராஜ் , அருட்பணி அம்புறோஸ் , அருட்பணி குமார் ஆகியோர் இணைந்து திருவிழா கூட்டுத் திருப்பலியை இன்று ஒப்புக்கொடுத்தனர் .
சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தல வருடாந்த திருவிழா பங்குதந்தை திருச்செல்வம் தலைமையில் 11.09.2015 வெள்ளிக்கிழமை மாலை 05.30 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது .
திருத்தல திருவிழா நவ நாட்காலங்களில் தினமும் மாலை 05.03 மணிக்கு திருசெபமாலையும், மறைவுரைகளும், பிராத்தனைகளுடன் திருப்பலிகளும் இடம்பெற்றது .
19.09.2015 சனிக்கிழமை மாலை 05.30 மணிக்கு திருத்தல பொது நவநாள் வழிபாடுகளும் , மறைவுரைகளும் இடம்பெற்றதுடன் தொடர்ந்து நற்கருணை பவணியும் விசேட திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டது .
இன்று ஞாயிற்றுக் கிழமை காலை 07.00 மணிக்கு சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தின் 207 வது வருடாந்த திருவிழா திருப்பலி திருகோணமலை மறைமானில ஆயர் கிறிஸ்ரியன் நோயல் இம்மானுவல் ஆண்டகை தலைமையில் பங்குதந்தை திருச்செலம் ,அருட்பணி தேவராஜ் , அருட்பணி அம்புறோஸ் , அருட்பணி குமார் ஆகியோர் இணைந்து திருவிழா திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டு திருப்பலியின் பின் திருச்சிலுவை பவணி இடம்பெற்றதுடன் தொடர்ந்து திருத்தல திருவிழா திருநாள் கொடியிறக்கத்துடன் திருத்தல வருடாந்த திருவிழா நிறைவுபெற்றது .
இன்று இடம்பெற்ற திருத்தல திருவிழா திருப்பலியில் பல பகுதியிலிருந்து வருகை தந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு திருத்தல திருவிழா திருப்பலியை சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது .


