மட்டக்களப்பு தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மண்முனை வடக்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனம் ஏற்பாடு செய்த இரத்ததான முகாம்
( அமிர்தகழி நிருபர் )
மட்டக்களப்பு தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மண்முனை வடக்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனம் ஏற்பாடு செய்த இரத்ததான முகாம் மட்டக்களப்பு தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மாவட்ட உதவி பணிப்பாளர் ஜனாப் எம் எல் .எம் .என் .நைரூஸ் வழிகாட்டலின் பிரதேச சம்மேளன தலைவர் இ.டி .பயஸ்ராஜ் தலைமையில் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பணிமனையில் இடம்பெற்றது .
.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்தவங்கியில் நிலவும் இரத்தப்பற்றாக்குறையை நிவர்த்திசெய்யும் வகையில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் இந்த இரத்ததான முகாமை ஏற்பாடு செய்துள்ளது .
இளைஞர்கள் சமூக சேவைகளை மேற்கொள்ளவேண்டும் என்ற நோக்கில் இந்நிகழ்வு முன்னெடுத்துவருகின்றது.
இதன்கீழ் இன்று காலை முதல் மாலை வரை இந்த இரத்ததான முகாம் நடாத்தப்பட்டது .
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப்பிரிவு வைத்தியர் மற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.


