மட்டக்களப்பு மாநகர சபையில் மரநடுகை நிகழ்வு
எம்.ஐ.அப்துல் நஸார்
கடந்த வெள்ளிக்கிழமை (18) மட்டக்களப்பு மாநகர சபையில் மரநடுகை நிகழ்வொன்று நடைபெற்றது.
மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர சபையின் உயர் அதிகாரிகளும் உத்தியோகத்தர்களும் மற்றும் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு மாநகர சபையின் பின்புறமாக அமைந்துள்ள கோட்டைப் பூங்காவை அண்மித்த வாவிக்கரையிலேயே மரங்கள் நடப்பட்டன.
உள்ளூராட்சி வாரத்தினை முன்னிட்டு இந்த மரநடுகை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



