Breaking News

சிவில் பாதுகாப்பு குழு அமைப்பு


எம்.ஐ.அப்துல் நஸார்

காத்தன்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதிய காத்தான்குடி கிழக்கு 167பி பிரிவுக்கான சிவில் பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது

காத்தன்குடி பொலிஸாரின் ஏற்பாட்டில் புதிய காத்தான்குடியில் அமைந்துள்ள பலநோக்கு மற்றும் வாசிகசாலைகக் கட்டத்தில் நேற்று (17) குறித்த பிதேசத்தின் கிராம சேவகர், அரசாங்க உத்தியோகத்தர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பிரதேச மக்கள் என பெருமளவானோர் இந் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர். 
காத்தன்குடி பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த எம்.எம்.ஏ.அஹமட் மற்றும் பியால் விக்ரமசிங்க ஆகியோரது நெறிப்படுத்தலில் சிவில் பாதுகாப்பு குழு அங்கத்தவர்கள் தெரிவு சுமூகமாக நடைபெற்றது. 

புதிய காத்தான்குடி கிழக்கு 167பி பிரிவுக்கான சிவில் பாதுகாப்பு குழுவின் தலைவராக மட்ஃஅன்வர் வித்தியாலய அதிபர் எம்.ஏ.சீ.நியாஸ் தெரிவு செய்யப்பட்டதோடு உப தலைவராக ஏ.எல்.அம்ஜத் தெரிவு செய்யப்பட்டார். அத்துடன் செயலாளராக புதிய காத்தான்குடி கிழக்கு 167பி பிரிவு கிராம சேவகர் திருமதி சில்மியா அன்சார், உப செயலாளராக எம்.ஐ.அப்துல் நஸாரும் தெரிவு செய்யப்பட்டனர்.  

இலங்கை முழுவதிலுமுள்ள சகல மாவட்ட பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் கிராம உத்தியோகத்தர் பிரிவு உள்ளடங்குமாறு சாதி, மத, குல, ஏழை மற்றும் பணக்கார பேதமின்றி அல்லது அரசியல்  பேதமின்றி சிவில் பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டு பொலிஸார் சகல மக்கள் குழுவினருடனும் வாழ்ந்து, செயற்பட்டு மக்கள் வாழ்க்கை தொடர்பாக நன்கு ஆராய்ந்து விளங்கிக் கொண்டு சம்பவங்களுக்கு அடித்தாளமிடும் விடயங்களைத் தடுத்தல் மற்றும் தீர்ப்பளித்தலுக்கான உபதேசம், அதன்படி செயற்படல், பூரணத்துவம், பொறுப்பு மற்றும் செயற்பாட்டுப் பிரவேசம் ஆகியவற்றினூடாக சிவில் பாதுகாப்பு குழு செயற்பட எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.