Breaking News

சிறுநீரக நோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் இணையத்தளத்தை ஆரம்பித்துவைத்தார் ஜனாதிபதி.

இலங்கையில் சிறுநீரக நோய் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஜனாதிபதி செயலணியினால் உருவாக்கப்பட்ட உத்தியோகபூர்வ இணையத் தளத்தை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.

சிறுநீரக நோய் தடுப்பு ஜனாதிபதி செயலணியின் விளம்பரத் தூதுவர்களாக நியமிக்கப்பட்ட முத்தையா முரளிதரன் மற்றும் டி. எம். தில்ஷான் அவர்களுக்கான கடமைகள் மற்றும் நோக்கங்கள் குறிப்பிடப்பட்டுள்ள கடிதத்தினை ஜனாதிபதி அவர்கள் கையளித்தார்.