Breaking News

நாட்டின் தேசிய பொருளாதாரத்தை அடுத்தகட்டத்திற்கு எடுத்து செல்வதே எமது நோக்கம் ஜனாதிபதி.

நாட்டின் தேசிய பொருளாதாரத்தை அடுத்தகட்டத்திற்கு எடுத்து செல்லும் போது எமது உற்பத்திகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்குவதே புதிய அரசாங்கத்தின் நோக்கம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

தேசிய தொழிற்சாலைகளை சக்திமயப்படுத்துவது, தேசிய உணவு உற்பத்தியை பெருக்குவது, சர்வதேச சந்தையில் பொருளாதாரத்தை வலுப்படுத்துதிலும் எமது உற்பத்திகள், எமது முயற்சி, எமக்கான அனைத்தையும் பயன்படுத்துவதே அரசாங்கத்தின் கொள்கையாக கொண்டுள்ளோம் எனவும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இதன் போது குறிப்பிட்டார்.