Breaking News

முதல் அமைச்சரின் அமைச்சின் கீழ் உள்ள திணைக்களங்களில் நிலவுகின்ற குறைபாடுகள் மற்றும் அபிவிருத்தி தொடர்பான விடயங்களை நிவர்த்தி செய்யும் நோக்கில் முதல் அமைச்சர் நசீர் அகமட் கல்லடிக்கு விஜயம்

(அமிர்தகழி நிருபர் )

கிழக்கு மாகாணத்தில் முதல் அமைச்சரின் அமைச்சின் கீழ் உள்ள திணைக்களங்களில் நிலவுகின்ற குறைபாடுகள் மற்றும் அபிவிருத்தி தொடர்பான விடயங்களை நிவர்த்தி செய்யும் நோக்கில்  கடந்த நான்கு நாட்களாக கிழக்கு மாகாணத்தில் உள்ள   அமைச்சின் அனைத்து திணைக்களங்களுக்கும்  கிழக்கு மாகாண முதல் அமைச்சர்  நசீர் அகமட்  விஜயத்தை மேற்கொண்டுள்ளார் .

இதன் கீழ் இன்று மட்டக்களப்பு கல்லடி கிராமிய கைத்தொழில் திணைக்கள மாவட்ட அலுவலகத்திற்கு விஜயத்தை மேற்கொண்டதுடன் , மாவட்ட அலுவலகத்தில் நிலவுகின்ற குறைபாடுகள் மட்டும் அபிவிருத்தி வேலைகள் தொடர்பாக நேரடியாக கேட்டறிந்து கொண்டதுடன்  இங்கு நிலவுகின்ற பிரச்சினைகளுக்கும் தீர்வினை  பெற்று தருவதாக தெரிவித்துக்கொண்டார் .

இந்நிகழ்வின் போது கிழக்கு மாகாண முதல் அமைச்சரின் செயலாளர்  யு .எல் .எ .அசிஸ் ,உதவி செயலாளர் .எ .டி .எம் .ராபிக் ,கிழக்கு மாகாண திணைக்கள பணிப்பாளர் .கே .குணநாதன் , மாவட்ட உதவி பணிப்பாளர் .இளம்குமுதன், திட்டமிடல் அதிகாரி .என் .தமிழ்ச்செல்வன் மற்றும்  திணைக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் .