Breaking News

இலங்கை கண் வைத்தியசாலையின் உப பணிப்பாளராக வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ் நியமனம்

எம்.ஐ.அப்துல் நஸார்

துறைசார் கலாநிதி இறுதி பரீட்சையில் சித்திபெற்று இலங்கை தேசிய கண் வைத்தியசாலையின் உப பணிப்பாளராக வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ் தனது பதவியனை பொறுப்பேற்ற பின்னர் தனது முகநூலில் 'அல்ஹம்துலில்லாஹ். துறைசார் கலாநிதி இறுதி பரீட்சையில் சித்திபெற்று இலங்கை தேசிய கண் வைத்தியசாலையின் உப பணிப்பாளராக உத்தியோகபூர்வமாக இன்று பணிகளைப் பொறுப்பேற்றேன். அல்லாஹ்வுக்கும் எனதருமைப் பெற்றோருக்கும், என்னுடன் பொறுமைகாத்து உறுதுணையாக ஒத்துழைப்பு நல்கிய மனைவி மக்களுக்கும் உடன் பிறப்புகளுக்கும், கண்கண்ட மற்றும் கண்காணாத ஆசிரியர்களுக்கும், உயிர் தோழர்களுக்கும் என்னை வளர்த்தெடுத்த தாய் மண்ணுக்கும் நன்றிகள் பலபோடி' என தெரிவித்துள்ளார்

வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேசத்தை பிறப்பிடமாகக் கொண்டவராவார்.