Breaking News

சிறுவர்களின் விபத்துக்களை தவிர்க்கும் முகமாக வாகன ழிப்புணர்வூட்டும் ஸ்டிக்கர்களை ஓட்டும் நிகழ்வு

(அமிர்தகழி நிருபர் )

சமூக மட்டத்தில் சிறுவர்களின்   விபத்துக்களை தவிர்க்கும் முகமாக  வாகன சாரதிகளுக்கு விழிப்புணர்வூட்டும்  ஸ்டிக்கர்களை முக்சக்கரவண்டிகளில் ஓட்டும் நிகழ்வு இன்று காத்தான்குடி பொலிஸ் பிரிவில் பொலிஸ் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி ஜகத் துசார தலைமையில் இடம்பெற்றது ,

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி .எஸ் .எம் . சார்ள்ஸின் வழிகாட்டலுக்கு அமைவாக ஐரோப்பிய நிதி உதவியுடன்   சமூக மட்டத்தில் சிறுவர்களுக்கு ஏற்படுத்தும் விபத்துக்களை தவிர்க்கும் வகையில் மட்டக்களப்பு சர்வோதய நிறுவனமும் மற்றும் காத்தான்குடி போக்கு வரத்து பொலிஸ் பிரிவும் இணைந்து  இன்று மாலை கந்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முக்சக்கர வண்டிகளின் விபத்துக்களை தவிர்க்கும் முகமாகவும்  ,வீதி விதிமுறைகளை பின்பற்றி வாகனத்தை செலுத்துவது தொடர்பாக  சாரதிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது தொடர்பான செயல்திட்டம் இடம்பெற்றது .

இதன் போது வீதிச் சாமிஞ்சகளை மதித்து நடக்கும் சாரதிகளை பாராட்டுகின்றோம் , சாரதிகளே உங்களின் கவனமின்மை ஊரவரின் உயிரைக் குடிக்கும் , வீதி ஒழுங்குகளை கடைப்பிடிப்போம்  விபத்துக்களை தவிர்ப்போம் , சாரதிகளே அதிகவேகம் வாழ்வின் ஆனந்தங்களை இல்லாது செய்துவிடும் போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வாசகங்கள் பொறிக்கப்பட்ட ஸ்டிக்கர்களை முக்சக்கரவண்டிகளில் ஒட்டப்பட்டது .

 இந்நிகழ்வில்   சர்வோதய நிறுவன திட்ட உத்தியோகத்தர்  த .மயூரன்  மற்றும் காத்தான்குடி போக்குவரத்து பொலிஸ் பிரிவு உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்  .