Breaking News

21 முதல் 27 ஆம் திகதிவரையான கலப்பகுதி சமுத்திர மற்றும் கடல்சார் வாரமாக இலங்கை அரசாங்கத்தினால் பிரகடனம்.

செப்டம்பர் 21 முதல் 27 ஆம் திகதிவரையான கலப்பகுதியை சமுத்திர மற்றும் கடல்சார் வாரமாக இலங்கை அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதோடு, இதன் அங்குரார்ப்பண நிகழ்வைக் குறிக்குமுகமாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கு ஒரு நினைவுச் சின்னம் கையளிக்கும் நிகழ்வு நேற்று முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

இலங்கையில் இந்த கருப்பொருளின் கீழ் இவ்வாறான ஒரு நிகழ்ச்சித்திட்டம் நடைபெறுவது இதுவே முதற்தடவை என்பதோடு, சர்வதேச சமுத்திர நிறுவனத்தின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலுக்கேற்ப இந்த நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.