உங்கள் தலையில் துர்நாற்றம் வீசுகிறதா? இதோ அதற்கான சில தீர்வுகள்!!!
உங்கள் தலையில் துர்நாற்றம் வீசுகிறதா? இதோ அதற்கான சில தீர்வுகள்!!!
சிலருக்கு தலையில் அதிகம் வியர்க்கும். அப்படி அதிகம் வியர்ப்பதால் தலையில் கடுமையாக துர்நாற்றம் வீசும். இன்னும் சிலருக்கு தலையில் பொடுகு இருக்கும். பொடுகு தலையில் இருந்தால், அதுவும் ஒருவித துர்நாற்றத்தை ஏற்படுத்தும். இப்படி தலை எப்போதும் துர்நாற்றத்துடன் இருந்தால், நம் அருகில் யாரும் வரமாட்டார்கள்
எனவே பலரும் கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த ஹேர் ஸ்ப்ரே பயன்படுத்துவார்கள். ஆனால் அவை பக்க விளைவுகளை ஏற்படுத்தும். அதுவே இயற்கை பொருட்களைக் கொண்டு முடியை நறுமணத்துடன் வைத்துக் கொண்டால், முடி ஆரோக்கியமாக இருக்கும்.
சரி, இப்போது முடியை நறுமணத்துடன் வைத்துக் கொள்ள உதவும் இயற்கை வழிகள் என்னவென்று பார்ப்போm
பேக்கிங் சோடா உங்கள் முடியில் துர்நாற்றம் வீசினால், பேக்கிங் சோடாவைப் பயன்படுத்துங்கள். ஏனெனில் பேக்கிங் சோடா எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்துவதோடு, துர்நாற்றத்தையும் தடுக்கும். அதற்கு 3 பங்கு நீரில் 1 பங்கு பேக்கிங் சோடா சேர்த்து கலந்து, ஈரமான முடியில் தடவி 5 நிமிடம் கழித்து, நீரில் அலசுங்கள்.




