வெளிநாட்டு பெண்ணை கடத்த முயற்சியில் அவளின் காதலன் மீதும் தாக்குதல்
வெலிகம, மிரிஸையில் வைத்து 23 வயது வெளிநாட்டு பெண் பிரஜையை கடத்துவதற்கு முயற்சித்ததுடன் அவருடைய காதலன் மீது தாக்குதல் கூரிய ஆயுதத்தினால் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை துரிதப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் காயமடைந்த வெளிநாட்டு பிரஜை, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வெளிநாட்டு பிரஜைகள் இருவரும், விருந்துபசாரத்தை முடிந்துக்கொண்டு இன்று திங்கட்கிழமை காலை 3அல்லது 4 மணியளவில் ஹோட்டலுக்கு திரும்பி கொண்டிருந்துள்ளனர்.
அவ்வாறு திரும்பும் போது, வெளிநாட்டு பெண்ணை சந்தேகநபர் கடத்துவதற்கு முயற்சித்துள்ளார். தன்னுடைய காதலியை கடத்துவதற்கு முயன்ற அந்த நபரை, வெளிநாட்டு காதலன் தாக்கியுள்ளார்.
இதன்போதே, சந்தேகநபர், வெளிநாட்டு பிரஜையின் மீது தாக்குதல் நடத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டதாக தெரியவருகின்றது.



