சிவகார்த்திகேயனை தாக்கியது கமல்ரசிகர்களா.?
திருச்செந்தூரில் சி.ப.ஆதித்தனார் சின்னையாவின் சிலை திறப்பு விழாவிற்காக கமல்காஹசனும், சிவகார்த்திகேயனும் ஒன்றாக மதுரை சென்றுள்ளனர். அப்போது சிவகார்த்திகேயனை கமல் ரசிகர்கள் வெளுத்து வாங்கியுள்ளனர். இதுகுறித்து சிவகார்த்திகேயனிடம் கேட்டபோது அவர் அமைதி காத்துவிட்டாராம். இதற்கு என்ன காரணமாக இருக்கும் என்பதே பலரின் கேள்வி. அன்று முதல் இன்று வரை கமல்ஹாசனும் ரஜினியும் தொழில் ரீதியாக போட்டியிட்டுக் கொண்டுதான் உள்ளனர். இதற்கு சமீபத்தில் வெளியான தூங்காவனம் டிரைலரும் கபாலி ஃபர்ஸ்ட் லுக்குமே சான்று. சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது வெளியாகவிருக்கும் படம் ரஜினிமுருகன். இப்படத்தில் இவர் ரஜினி ரசிகனாக நடித்துள்ளார். இது ஒரு காரணமாக இருக்கலாம். மேலும் கடந்த 2013ம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஒரு காட்சியில் சிவா, ‘இந்த நாட்டை விட்டு போறதைத் தவிர எனக்கு வேற வளி தெரியவில்லை’ என்று ஒரு டையலாக் பேசுவார். இது விஸ்வரூபம் வெளியாவதற்கு முன்பு இப்பட பிரச்சனை காரணமாக மனம்நொந்து மிகவும் வருத்தத்துடன் கமல் பேசிய வசனம். இதை சிவா காமெடியாக பேசியதை, கமல்ஹாசனை சிவகார்த்திகேயன் கிண்டல் செய்ததாகவே கருதி கமல் ரசிகர்கள் இப்படி செய்திருப்பார்களோ? எப்பவோ நடந்ததிற்காக இப்போது வசமாக மாட்டிய சிவகார்த்திகேயனை வெளுத்துள்ளனரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


