Breaking News

அடுத்த ஆண்டு தொடக்கம் ஹஜ் யாத்திரிகர்களுக்கான கோட்டா குறைக்கப்படமாட்டாது – சவூதி அரேபிய ஹஜ் அமைச்சர்

எம்.ஐ.அப்துல் நஸார்.

மக்கா பள்ளிவாயலின் உட்புற விஸ்தரிப்பு காரணமாக இம்முறை ஹஜ் யாத்திரிகர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. அவ்வாறு குறைக்கப்பட்ட எண்ணிக்கையிலான யாத்திரிகர்களைக் காண்பது இதுவே கடைசித் தடவையாக இருக்கும். 'அடுத்த வருட ஹஜ் பருவகாலம் தொடக்கம் ஐந்து மில்லியனாகவும் எதிர்வரும் ஐந்து ஆண்டுகளில் 30 மில்லியனாகவும் அதிகரிக்கப்படும்' என ஹஜ் அமைச்சர் பந்தர் ஹாஜியாரை மேற்கோள்காட்டி உள்ளூர் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.   

முந்தைய ஹஜ் பருவகாலங்களை விட இவ்வருட ஹஜ் கடமைகள் சிறப்பாகவும் கௌரவமானதாகவும் அமைவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  

ஹஜ் யாத்திரிகர்களின் பெயர்களுக்கு மேலதிகமாக ஒப்பந்தங்கள், அளிக்கப்படும் சேவைப் பொதி, போக்குவரத்து மற்றும் தங்குமிட வசதி போன்ற நிறைவேற்றப்பட்டு ஆவணப்படுத்தப்படும் வந்து சேர்தல் செயன்முறைளோடு தொடர்பு பட்ட அனைத்து செயற்பாடுகள் மற்றும் பணிகள் ஊடாக சவூதி அரேபியாவுக்கு வெளியிலிருந்து வருகின்ற ஹஜ் யாத்திரிகர்களுக்கான ஒரேசீரான இலத்திரனியல் முறைமை ஒன்றினை உருவாக்கி செயற்படுத்துவதாக அத்தகைய ஏற்பாடுகள் இருக்கும் என அவர் விளக்கினார்.  

எவரேனும் ஆள் ஒருவருக்கு ஹஜ் யாத்திரைக்கான வீசா விநியோகம் மற்றும் அளிப்பு ஆகியவை ஒரே சீரான இலத்திரனியல் முறைமை மூலம் செய்யப்படுவதனை ஹஜ் அமைச்சும் வெளிநாட்டு அமைச்சும் கண்காணிக்கின்றன. 

உள்நாட்டு யாத்திரிகர்களைப் பொறுத்தவரை பிரஜைகளும் வதிபவர்களும் தமக்கு விருப்பமான ஹஜ் சேவை வழங்குனர்கள் ஊடாக அனுமதியினைப் பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்காக இலத்திரனியல் முறைமைiயான்றினையும் அமைச்சு உருவாக்கியுள்ளது. அத்துடன் தமக்கு வேண்டிய சேவைப் பிரிவினை தெரிவு செய்வதற்கும், அளிக்கப்படும் சேவையின் பெறுமதிக்கேற்ப இலத்திரனியல் முறைமை மூலம் கொடுப்பவினை மேற்கொள்வதற்கும் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. 

இலத்திரனியல் முறைமை மூலமான விண்ணப்ப நடைமுறை யாத்திரிகர்களின் சிறந்த எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்துள்ளது. பிரதானமாக சிறந்த சூழலில், சேவைகள் மூலம் தனது அனுஷ்டானங்ளை மேற்கொள்ளும் வகையில் சேவைகளுக்கான கட்டுப்பாட்டு விலைகள், அதேபோன்று அவர்களது உரிமைகளும் மற்றும் சேவை வழங்குனர்களினது உரிமைகளும் பாதுகாக்கப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்தார். 

இறைவனின் விருந்தளிகளின் பாதுகாப்பு முக்கியமானதாகும். அவர்கள் தமது புனித கடமைகளை நிறைவேற்றிவிட்டு சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் எந்தவித சுகாதார பிரச்சினைகளுமின்றி தத்தமது நாடுகளைச் சென்றடைவதை உறுதிப்படுத்துவதே எமது தலைமைத்துவத்தின் மிக முதன்மையான எதிர்பாhப்பாகும். 

அந்த வகையில் அனைத்து ஹஜ் யாத்திரிகர்களுக்கும் விருந்தினர்களுக்கும் சிறந்த சுகாதார சேவையினையும் மருத்துவ பாராமரிப்பனையும் வழங்குமாறு ஹஜ் செயற்பாட்டோடு தொடர்புபட்ட அனைத்து தரப்பினரையும் மன்னரும் முடிக்குரிய இளவரசரும் பணித்துள்ளனர். அத்தகைய செயற்பாட்டிற்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் ஒத்துழைப்பும் இணைப்பும் அவசியமாகும். ஆனால் அமைச்சின் மீதுள்ள பாரிய சுமை என்னவென்றால் யாத்திரிகள் அமைதியாக தமது கடமைகளை நிறைவேற்றுவதற்காக அரசின் பணிப்புரையினை நிiவேற்றுவதற்கு முழு முயற்சியும் மேற்கொள்வதாகும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். 
இங்கிருந்து வெளியேறும் யாத்திரிகர்கள் எவரும் வைரஸ் தொற்றுக்கு இலக்காகாதிருப்பதை உறுதி செய்வதற்காக அமைச்சு விரிவான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அந்த வகையில் அமைச்சிலுள்ள கட்டுப்பாட்டு மற்றும் கட்டளை மத்திய நிலையம் விரிவாக அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தொற்றுக்கள் ஏற்படுமிடத்து அவற்றை கட்டுப்படுத்துவதற்கான தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.