Breaking News

ரணில் மஹிந்த பசிக்குடாவில் இரகசியச் சந்திப்பு

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இருவரும், பாசிக்குடாவிலுள்ள 'சண் அன்ட் ஃபண்' ஹோட்டலில் வைத்து, நேற்று இரகசியச் சந்திப்பொன்றில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுமுறைக்காக இருவரும் அங்கு சென்றிருந்ததாகவும் அங்கு வைத்தே இந்தச் சந்திப்பு நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்படுவதோடு இச்சந்திப்பைத் தவிர, வேறுபல இரகசிய அரசியல் சந்திப்புகளும் இடம்பெற்றுள்ளன. இது தொடர்பான உத்தியோகபூர்வமான அறிவிப்பேதும் வெளியாகியிருக்கவில்லை.