பல்கலைக்கழக தலைமைத்துவப் பயிற்சி இனி இல்லை
பல்கலைக்கழகத்துக்கு தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்படும் 'நாயகத்வ புஹுணுவ' என அழைக்கப்படும், தலைமைத்துவ பயிற்சி, இவ்வருடத்திலிருந்து வழங்கப்பட மாட்டாது என பல்கலைக்கழக கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
பல்கலைக்கழகத்துக்கு புதிதாக தெரிவாகும் மாணவர்களின் தலைமைத்துவப் பண்பு மற்றும் மொழித் திறமைகளை விருத்தி செய்ய வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என அவர் கூறினார்.
பல்கலைக்கழக மாணவர்களுக்காக தலைமைத்துவப் பயிற்சியானது, 20 இராணுவ முகாம்களில் வழங்கப்பட்ட நிலையில் இந்த பயிற்சியின்போது, நோய் மற்றும் அசௌகரியங்களுக்கு மாணவர்கள் முகங்கொடுக்க நேரிட்டதாக கடந்த காலங்களில் முறையிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



