Breaking News

ஆயித்தியமலை சதாசகாய அன்னை ஆலய வருடாந்த திருவிழா திருப்பலி

ஆயித்தியமலை  சதாசகாய அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குதந்தை அருட்பணி ஜுலியன் தலைமையில் 28.08.2015  வெள்ளிக்கிழமை மாலை  05.30 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது .  
ஆலய திருவிழா நவ நாட்காலங்களில் தினமும் மாலை 05.03 மணிக்கு திருசெபமாலையும், மறைவுரைகளும், விசேட திருப்பலிகளும்  இடம்பெற்றது .

05.09.2015  சனிக்கிழமை மாலை 05.30 மணிக்கு  ஆலயத்தில் விசேட திவ்விய நற்கருணை வழிபாடுகளும் , மறைவுரைகளும்  இடம்பெற்றதுடன்   தொடர்ந்து  சதாசகாய அன்னையின் திரு உருவம் பவணியும் விசேட திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டது   .

06.09.2015 ஞாயிற்றுக் கிழமை காலை 07.00 மணிக்கு மட்டக்களப்பு மறைமாவட்ட  ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை   தலைமையில் திருத்தந்தையின் இலங்கைக்கான பிரதிநிதி பேராயர் வான் டொட்  ஆண்டகை  இணைந்து திருவிழா திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டு  திருப்பலியின்  பின் ஆலய திருவிழா   திருநாள்  கொடியிறக்கத்துடன் ஆலய வருடாந்த திருவிழா நிறைவுபெற்றது  .
 இடம்பெற்ற ஆலய திருவிழா திருப்பலியில்  இலங்கையில்  பல பகுதியிலிருந்து  வருகை தந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு திருவிழா திருப்பலியை சிறப்பித்தனர் .
(அமிர்தகழி நிருபர் )