Breaking News

நிமல் சிரிபால டி சில்வா புகைவண்டியில் பதுளை பயணம்

எம்.ஐ.அப்துல் நஸார்

மலையகப் புகையிரதப் பாதைகளில் தற்போது நிலவும் குறைபாடுகளைக் கண்டறிவதற்காக முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தற்போதைய போக்குவரத்து அமைச்சருமான நிமல் சிரிபால டி சில்வா உடரட மெனிக்கே புகையிரதத்தில் பயணமொன்றை மேற்கொண்டார். 

கடந்த  (12) காலை 8.30 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்த அமைச்சர் பிற்பகல் 1.30 மணிக்கு ஹட்டன் புகையிரத நிலையத்தைச் சென்றடைந்தார். 

சீர்குலைந்துபோயுள்ள புகையிரத சேவைக்கு புத்துயிரளிக்கவுள்ளதாக அமைச்சர் அங்கு தெரிவித்தார். 

புகையிரதம் மூலம் பயனிக்கும் பயணிகளுக்கு தரமான சேவையினை வழங்கும் நோக்கிலேயே குறைபாடுகளைக் கண்டறிவதற்காக தான் புகையிரதத்தில் பயணிக்கத் தீர்மானித்ததாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.